புதுச்சேரியில் குடியுரிமை சட்டம் குறித்து பொதுமக்களிடம் பிரசாரம்

புதுச்சேரியில் குடியுரிமை சட்டம் குறித்து மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி, வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் விளக்கி கூறினார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதிலும் எதிர்கட்சிகள் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி, புதுச்சேரியில் உள்ள குறிஞ்சி நகரில் வீடு வீடாக சென்று குடியுரிமை சட்டம் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தங்களது வீடுகளில் வண்ணக் கோலமிட்டு மத்திய அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.

Exit mobile version