வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி பொது விடுமுறை…

வேலூர் மக்களவை தொகுதிக்கு, ஆகஸ்ட் 5ஆம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. களத்தில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதையடுத்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி பொது விடுமுறை அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version