அரசு பள்ளிக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்களை சீர்வரிசையாக பொதுமக்கள் வழங்கினர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளிக்கு 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன.

நாகர்கோவிலில் உள்ள இந்தப் பள்ளிக்கு கல்வி கற்க தேவையான பொருட்களை பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சீர்வரிசையாக வழங்கினர். அதன்படி பீரோ, சேர், மின் விசிறி, பென்சில், லேப்டாப், இன்வெர்ட்டர், விளையாட்டு உபகரணங்கள், தண்ணீர் டேங்க், உள்ளிட்ட 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்து ஊர்மக்கள் கொடுத்தனர்.

தனியார் பள்ளிகளுக்கு கல்வியில் சவால் விடும் அரசு பள்ளிகள் முன்னேறி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Exit mobile version