ஆசிரியர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்த பெற்றோர்கள்

நாகை அருகே அரசு பள்ளியில் பயில புதிதாக சேர்க்கப்பட்ட 52 குழந்தைகளுக்கு சால்வை அணிவித்து ஆசிரியர்கள் வரவேற்றனர்.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் அமைந்துள்ளது அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த இப்பள்ளியில் சென்ற ஆண்டு சேர்க்கை என்பது வெகுவாக குறைந்தது. இதனை ஈடுசெய்யும் விதமாக அக்கரைப்பேட்டை கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அப்பகுதி பெற்றோர்களிடம், குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கும்படி எடுத்துக் கூறினர். அதன்படி பெற்றோர்கள் 52 குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்த்தனர்.

முன்னதாக ஒன்றாம் வகுப்பில் சேர்க்கைக்காக வந்த மாணவ, மாணவிகளுக்கும், கிராம மக்களும், ஆசிரியர்களும் ஒன்று சேர்ந்து மாலை, சால்வை அணிவித்து மேள தாளங்கள் முழங்க பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

Exit mobile version