ஸ்டேட் வங்கிக் கிளையை உடனடியாக நிறுவ பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் கிழ்பென்னாத்தூரில் ஸ்டேட் வங்கிக் கிளையை நிறுவ பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு, நிலஅளவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஸ்டேட் வங்கியில் மட்டுமே பணம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள், அங்கு ஸ்டேட் வங்கி கிளை இல்லாததால், திருவண்ணாமலையில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு சென்று பணம் செலுத்த வேண்டியுள்ளதாக கூறுகின்றனர்.

கீழ்பென்னாத்தூரில் பல்வேறு வங்கிகளின் கிளைகள் உள்ள நிலையில், ஸ்டேட் வங்கிக் கிளையை உடனடியாக நிறுவ கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு இல்லாதபட்சத்தில், இதர வங்கிகளில் பணம் செலுத்த வழிவகை செய்யவும் கோரியுள்ளனர்.

Exit mobile version