மூணாறில் தடை செய்யப்பட்ட போதிலும் மீண்டும் போலி தேன் விற்பனை நடைபெறுவதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
கேரளா மாநிலம் மூணாரில் சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் போலி தேன் விற்பனை நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகளை நோட்டமிட்டு போலி தேன் விற்பனை நடைபெறுவது தொடர்ந்து வருகிறது. இங்குள்ள முக்கிய சுற்றுலா தலமான எக்கோ பாயிண்ட், குண்டளை அணை, டாப் ஸ்டேஷன் போன்ற பகுதிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கே, ஒருசிலர் தேன் என்று பொய் கூறி ரசாயனம் கலந்த பாகுவை சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்து வந்தனர். இந்த நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும், தற்போது மீண்டும் இது மீண்டும் நடைபெறுவதால், இதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்