திருப்பூர் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

பல்லடத்தில் மாசு ஏற்படுத்தி வரும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த வாழைத்தோட்டம், சின்னக்கரை உள்ளிட்ட பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்படடோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சுற்றி 50க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தநிலையில், சாயப்பட்டறை நிறுவனங்கள், பிரிண்டிங் நிறுவனங்களும் சுத்திகரிக்கப்படாத ஜீரோ டிஸ்சார்ஜ் செய்யாத கழிவு நீரை கிணறு, போர் மற்றும் ஓடைகளில் வெளியேற்றுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், பாய்லர் நிறுவனங்களிலிருந்து கருப்பு துகள்கள் வெளியேற்றப்படுவதால், சூவாச கோளாறு, போன்ற நோய்களால் பாதிக்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சாயப்பட்டறைகளை மூடி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version