தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அமைந்துள்ள புத்தன்தருவை குளத்தை தூர்வார அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தான்குளத்தில் உள்ள புத்தன்தருவை குளம் ஆயிரத்து 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குளத்திலிருந்து சுற்றுவட்டாரத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட கிராமமக்களுக்கு குடிநீர் கிடைத்து வருகிறது. மேலும் விவசாய பணிகளுக்கும் குளத்தின் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு டி.எம்.சி. தண்ணீரை தேக்கும் அளவிற்கு கொள்ளளவு கொண்ட இந்த குளத்தை முழுமையாக தூர்வாரினால் மேலும் ஒரு டி.எம்.சி. தண்ணீரை தேக்க முடியும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குளம் தூர்வாரும் பணிகள் துவங்கியது. ஆனால், சிலர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இந்தப் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து திருச்செந்தூர் தென்பகுதி விவசாய சங்கத் தலைவர் சத்தியசீலன் தலைமையில் சுற்றுவட்டார கிராமமக்கள் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.