சிவகங்கை அருகே சந்தன மரத்தை கடத்திய 3 பேரை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

சிவகங்கை அருகே தனியார் இடத்தில் இருந்த 4 லட்ச ரூபாய் மதிப்பிலான சந்தன மரத்தை வெட்டி கடத்திய 3 பேரை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சிவகங்கை அருகேவுள்ள ஒக்கூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, சிட்டாள் தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான இடத்தில் சந்தன மரம் வளர்த்து வந்தனர். இந்த நிலையில், 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அந்த சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றபோது, கிராம மக்கள் அவர்களை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மரத்தை கடத்த முயன்றவர்கள் மதுரை மாவட்டம் அய்யம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணன், சிவகங்கை மாவட்டம் பாப்பாகுடியை சேர்ந்த கட்டழகன் மற்றும் சர்க்கரை என தெரியவந்தது. அவர்கள் வெட்டிவைத்திருந்த 4 லட்ச ரூபாய் மதிப்பிலான சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் மூவரையும் கைது செய்தனர்.

 

Exit mobile version