பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகளை மிரட்டி அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ கருணாநிதி…

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட குரோம்பேட்டை அஸ்தினாபுரம் திருமலை நகர், சரஸ்வதி காலனி, மணிகண்டன் நகர், போன்ற பகுதியில் உள்ள சுமார் 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.

கடந்த ஞாயிறன்று அன்று பெய்த மழையின் காரணமாக பல்லாவரம் தாம்பரம் தொகுதிக்கிடையே அஸ்தினாபுரம் வரத்துகால்வாய் வழியாக நீர் வெள்ளபெருக்கெடுத்து ஓடியது அப்போது கால்வாய் இருபுறங்களிலும் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகத் தொடங்கியது இதை அறிந்த பல்லாவரம் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி ஆய்வு என்ற பேரில் தண்ணீர் புகுந்த இடத்திற்கு சென்று தனது ஆதரவாளர் வீடு உள்ள சரஸ்வதி நகர் பகுதியில் சுமார் 100 வீடுகள் உள்ளது… தனது ஆதரவாளர் வீடு அமைந்திருக்கும் அந்த பகுதியில் தண்ணீர் புகாமல் இருக்க…மணல் மூட்டையை வரவழைத்த திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி மணல் மூட்டைகளை குறுக்கே ஒன்றன் மீது ஒன்றாக அடுக்க சொல்லி அந்த பகுதியில் சென்ற நீரை தடுத்திருக்கிறார்…

இதில் என்ன இருக்கிறது வீடுகளுக்குள் தண்ணீர் புகாமல் மணல் மூட்டைகளை அடுக்கினார் என்று நீங்கள் நினைக்கலாம்… ஆனால் 100 வீடுகள் இருக்கும் பகுதிக்கு செல்லும் தண்ணீரை தடுத்ததால் மணல் மூட்டைகளை அடுக்கி சிறிது நேரத்தில் செம்பாக்கம் நகராட்சிக்குட்பட்ட திருமலை நகர் பகுதியில் சுமார் ஆயிரம் வீடுகளில் மூன்று அடிக்குமேல் தண்ணீர் கிடு கிடுவென உயர்ந்தது. தண்ணீர் புகுந்ததால் வீட்டில் யாரும் வாசிக்க முடியாத சூழ் நிலையில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டு 1000 வீடுகளும் பாதிக்கப்பட்டன. மூட்டைகள் அடுக்கப்பட்டதை அறிந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

மேலும் திமுக ஆதரவாளர்கள் நாங்கள் அப்படி தான் மணல் மூட்டைகளை அடுக்குவோம் என்று அலட்சியமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. திமுக ஆதரவாளர்கள் இருக்கும் பகுதியை காப்பாற்றும் நோக்கில் 1000 வீடுகள் இருக்கும் எங்கள் பகுதியை பலி கொடுத்துவிட்டார் என்று திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி மீது பகிரங்க குற்றச்சாட்டை வைக்கின்றனர் பொதுமக்கள். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் மணல் மூட்டைகளை சட்டவிரோதமாக இப்படி அடுக்கியது யார் என்று கேள்வி எழுப்பினார்? மேலும் இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ்க்கு விவரங்களை அளித்துள்ளதாகவும் கூறினார்.

மகன் கடையை வைக்க வேண்டும் என்பதற்க்காக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து பின்பு அகற்றியது என பல்லாவரம் திமுக எம்எல்ஏ மீது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறார் என்றும் கூறுகின்றனர் அந்த பகுதியில் இருப்பவர்கள்.

Exit mobile version