கடற்கரை மற்றும் உயிரியல் பூங்காக்களில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தளர்வுளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா உள்பட அனைத்து கடற்கரைகளுக்கும் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடற்கரைகளில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து கடைகளும், வரும் 23ம் தேதி முதல் இரவு 10 மணி வரை செயல்படலாம் என கூறப்பட்டுள்ளது.
நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்காக 50 சதவீத பயிற்சியாளருடன் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்துக்கு நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளை இயக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.