பப்ஜி மதனின் இன்ஸ்டாகிராம் முடக்கம் ; நெட்டிசன்களின் ஆதரவும், எதிர்ப்பும்!

பப்ஜி மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சைபர் க்ரைம் போலீஸார் முடக்கியுள்ளது நெட்டிசன்களிடையே வரவேற்பையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளது.

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை ஆபாசமாகப் பேசி விளையாடியதாகவும், பெண்களைத் தரக்குறைவாகப் பேசியதோடு, பலரிடமும் ஏமாற்றி பணம் பறித்ததாக யூடியூபர் மதன் அவரது மனைவி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் மதனின் யூடியூப் சேனல்களும் முடக்கப்பட்டன. இந்நிலையில் மதன் பயன்படுத்தி வந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் சைபர் க்ரைம் போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு,

அதில் இளைய சமூகத்தினருக்கு அறிவுரைகளை வழங்கியதோடு, தவறு செய்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்ற எச்சரிக்கையையும் விடுத்திருந்தனர்.

இதனை நெட்டிசன்களில் பலர் வரவேற்று நன்றி தெரிவித்த நிலையில், மதனின் பாலோயர்கள் நக்கலும் நையாண்டியுமாய் கருத்து பதிவிட்டுள்ளனர்.

 

 

Exit mobile version