`ஏழைகளான தங்களிடம் இருப்பது வெறும் ஆடிகார் தான் சொகுசுகார் அல்ல’ என்று நா தழுதழுக்க கிருத்திகா சொல்லி முடிப்பதற்குள் அங்கிருந்த நிருபர்களின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்துவிட்டது. இத்தனை நாட்களாக இவ்வளவு பெரிய சோகத்தை தனக்குள் அடக்கி வைத்திருக்கும் ஏழைத்தாயின் மகளைக்கண்டு தமிழ்நாடே கலங்கி நிற்கிறது. பேட்டியை பார்த்த கையுடன் ஆங்காங்கே உள்ள தனியார் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து கிருத்திகாவை வறுமையிலிருந்து மீட்டு ரோல்ஸ் ராய் போன்ற ஓரளவு சொகுசு கார்களை வாங்கி தர க்ரவுட் ஃபண்டிங் செய்து வருகின்றனர்.
மனித புனிதர் மதனின் மனைவிக்கு இப்படியொரு சோதனையா? என்று முன்னணி செய்தி சேனல்களில் விவாதங்கள் ஏற்பாடு செய்யபட்டு சிறப்பு விருந்தினர்கள் கைகளில் கிளிசரின்கள் இலவச இணைப்பாக கொடுக்கப்பட உள்ளன. ஆயிரம் தான் இருந்தாலும் வெறும் ஆடி காரை வைத்திருக்கும் கிருத்திகாவை கோடிகளில் புரள்கிறார் என உண்மை தெரியாமல் திட்டியது எவ்வளவு பெரிய தப்பு என்று வருந்தி பாவ மன்னிப்புக்காக சர்ச்சில் கியூ கட்டி நிற்கிறது ஒரு கூட்டம்.
நாளுக்கு நாள் வறுமையில் வாடிக்கொண்டு, சொகுசு கார்கள் வாங்க வழியில்லாமல், நாள்தோறும் 20 மணி நேரம் ஏசி ரூமில் வியர்வை சிந்தி பப்ஜி விளையாடி சேர்ந்த பணத்தில் மதன் – கிருத்திகா வாங்கியிருக்கும் ஆடி கார் குறித்தும் அதன் சிறிய வசதிகள் குறித்தும் பார்ப்போம்..
சாமானியர்களால் எளிதில் வாங்ககூடிய விலையான வெறும்.. வெறும் 66 லட்சம் தான் ஆடி ஏ6 காரின் விலை. மிகவும் சொற்பம்! ஏ6 மாடலை பொறுத்தவரை இரண்டு மாடல்கள் உண்டு. மற்றொரு மாடலான ஆடி ஏ6 45 TFSI technology விலை 71 லட்சத்தி சொச்சம்தான். கிருத்திகா தன் ஏழைகுடும்பத்துக்கு இந்த இரண்டு மாடல்களில் எதை வாங்கியிருக்கிறார் என தெரியவில்லை. வாடகை வீட்டில் வசித்து கஷ்டப்படும் அவர் 2ம் வகையை தேர்ந்தெடுத்திருப்பார் என கூறப்படுகிறது.
ஏ6 காரில் இருப்பது என்னவோ ஏழைகளுக்கே உரிய வஞ்சிக்கப்பட்ட 5 இருக்கைகள் தான். 73 லிட்டர் எரிபொருள் கொள்கலன் திறனைக்கொண்டிருக்கும் இந்த வகை காரில், ஐபோன் போன்ற அடிப்படை மாடல் மொபைல்களை உபயோகிக்கும் பரம ஏழைகளுக்காக டர்போ மற்றும் சூப்பர் சார்ஜர் வசதி உள்ளது. பிஎஸ் 6 இன்ஜினுடன் 7 கியரைக்கொண்டு ஆட்டோமெட்டிக் ட்ரான்ஸ்மிஷனுடன் கஷ்டப்படும் ஏழைகளுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த அரிய வகை ஆடி ஏ6 கார். இவ்வளவு குறைவான வசதி கொண்ட ஒரு காரை இத்தனை ஆண்டுகள் எப்படித்தான் ஓட்டி வந்தாரோ கிருத்திகா?!