பெட்ரோல் விலையை குறைக்குமா திமுக அரசு? – நிதியமைச்சரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

விடியல் தரப்போவதாக வீதிதோறும் பிரச்சாரம் செய்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் கைப்புள்ளயாக மாறி கபட காமெடி செய்த அமைச்சர் ஒருவர், நெட்டிசன்களின் நேரப்போக்குக்கு இன்றைய நாள் இரையாகி இருக்கிறார். யார் அவர்? பார்க்கலாம்….

பொய்களை எழுத்தாக வடித்து, புத்தகமாக்கி `தேர்தல் அறிக்கை’ என்ற பெயரில் வெளியிட்டது விடியல் குரூப். குறிப்பாக, நாங்கள் வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்போம் என்ற சத்தமாகச் சூளுரைத்ததை ஒட்டுமொத்த தமிழ்நாடும் நன்கறியும்.

இதற்கிடையில், குறைப்பதாக சொன்னீர்களே எப்போது குறைப்பீர்கள் என்று கேட்டால், அது போன மாசம் இது இந்த மாசம் பாணியில், குறைப்போம் என்று சொன்னோம்…எப்போது என்று சொன்னோமா என்று கேட்கும் விதமாக பதிலளித்தார் ஒரு பேரறிவாளிப் போர்வையில் இருக்கும் ஐ.டி.விங் அமைச்சர்.

இதற்கிடையில், உங்களுக்கு அறிவில்லையா என்று செய்தியாளர்களிடம் சீறி தன்னை அறிவாளியாகக் காட்டிக்கொள்ள முயன்று அதிலும் தோற்று இப்போது நெட்டிசன்களின் கலாய் மெட்டீரியலாக மாறிவிட்டதுதான் ஹைலைட்.

இந்நிலையில், அவர் மீண்டும் மீண்டும் அழுத்தமாக சொன்ன “தேதி போட்டாங்களா” என்ற வார்த்தையை சர்வதேச அளவில் கலாய் கவசமாக மாற்றி ட்விட்டரில் வறுத்தெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற எம்.ஜி.ஆர். பாடல் பின்னணியில் ஒலிக்க, தான் அமர்ந்த இடத்தை காலி செய்துவிட்டார் அந்த நிதியமைச்சர். ஆனால், அறிக்கையில் சொன்ன வாக்குறுதி மட்டும் இந்த ஆட்சியில் ஆதரவின்றி அலைகிறது.

Exit mobile version