கடந்த 42 மாதங்களில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக 10 ஆயிரத்து 391 கோடி ரூபாயை 21 அரசு வங்கிகள் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகம் அளித்த தகவலின்படி கடந்த 2015-2016 ஆம் ஆண்டில் இருந்து 2019-2019 ஆம் ஆண்டுவரை, வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து, 6 ஆயிரத்து 246 கோடி ரூபாய் அரசு வங்கிகள் அபராதமாக வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கு வைத்துள்ள வங்கி தவிர்த்து, வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் விதிக்கப்படும் அபராதம் மூலம் 4 ஆயிரத்து 145 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் மினிமம் பேலன்ஸ் பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து எஸ்.பி.ஐ 2 ஆயிரத்து 894 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கி 493 கோடி ரூபாயும், கனரா வங்கி 352 கோட ரூபாயும் அபராதமாக வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வங்கிகள் வசூலித்த அபராதங்களின் மதிப்புகள், விவரங்கள் மட்டுமே அளிக்கப்பட்டன, தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்த அபராத விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.