ரிசாட்-2 பி.ஆர் 1 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி-சி 48 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி – சி48 ராக்கெட் நாளை மதியம் 3. 25 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இந்த ராக்கெட், இந்தியாவிற்கு செந்தமான புவி கண்காணிப்பு செயற்கைக் கோளான ரிசாட்-2 பி.ஆர் 1-ஐ சுமந்து செல்ல இருக்கிறது.
628 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள் பூமியிலிருந்து 576 கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
பி.எஸ்.எல்.வி-சி 48 ராக்கெட் மூலம் வணிக ரீதியில் இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சொந்தமான 3 செயற்கைக் கோள்களும், அமெரிக்காவிற்கு சொந்தமான 6 செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.