வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி43 ராக்கெட்

31 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி43 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.58 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி43 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியா உருவாக்கிய ஒரு செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 23 செயற்கைக்கோள்கள் உள்பட 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது.

இஸ்ரோ விஞ்ஞானிகள் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரித்த 380 கிலோ எடை கொண்ட ஹைபர்ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. இந்திய வனப்பகுதி, நீர்நிலைகள், ராணுவ உளவு பணி போன்றவற்றிற்கு இந்த செயற்கைகோள் பயன்படுத்தப்படும். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

 

Exit mobile version