பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

பாலியல் புகாரில் சிக்கி கைதான பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அடுத்தடுத்து புகார் எழுந்தது. இதையடுத்து போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ராஜகோபாலனை கடந்த மாதம் 24ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். பின்னர் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதைதொடர்ந்து ராஜகோபாலன் மீது மேலும் 3 மாணவிகள் பாலியல் தொல்லை புகார் அளித்தனர். இந்நிலையில் ராஜகோபாலனை சென்னை போக்சோ நீதிமன்ற நீதிபதி முகமது பரூக் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது ராஜகோபாலனை 5 நாட்கள் போலீஸ் காவவில் விசாரிக்க காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து ராஜகோபாலனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு போக்சோ நீதிமன்ற நீதிபதி அனுமதி வழங்கினார். தொடர்ந்து ஜூன் மூன்றாம் தேதி ராஜகோபாலனை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Exit mobile version