குமரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏழை குடும்பத்தை சேர்ந்த 2 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து சீர் வரிசை மற்றும் நலத்திட்ட உதவிகளை கிறிஸ்தவ பொது நல இயக்கம் செய்துள்ளது.
வரும் 25 ம் தேதி உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட உள்ள நிலையில், குமரியில் சிறப்பு பிராத்தனை, வீட்டு அலங்காரம் என கொண்டாட்டங்கள், தற்போதே களை கட்ட துவங்கி உள்ளன. அந்த வகையில், நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இந்த நிலையில் அருமனை கிறிஸ்தவ பொது நல இயக்கத்தின் 2ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை ஒட்டி இன்று கிறிஸ்தவ மற்றும் ஹிந்து முறைப்படி 2 ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து சீர்வரிசை வழங்கினர்.தொடர்ந்து ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு நல திட்ட உதவிகளும் வழங்கினர். இதில் மும்மத குருக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.