ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது

சென்னை தரமணியில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தென்கிழக்கு ஆசியாவிலேயே புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் முதல் ப்ரோட்டான் தெரபி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக  பெருமிதம் தெரிவித்தார்.

 

Exit mobile version