பள்ளிக்கல்வித் துறைக்காக ரூ.1,93,419 கோடி ஒதுக்கீடு என பெருமிதம்

தமிழகத்தில், பள்ளிக் கல்வித்துறைக்காக இதுவரை ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 419 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் 14 பள்ளிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 95 பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் தொடங்கி வைத்தனர்.

பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் பென்ஜமின் தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறைக்காக இதுவரை ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 419 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மட்டுமல்லாமல் அதனை மிஞ்சுகின்ற வகையில் இருப்பதாகவும் கூறினார்.

Exit mobile version