தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் ‘தேசிய விவசாயிகள் தினம்’ ஆண்டுதோறும் டிசம்பர் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் விவசாயிகளுக்கு தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.
நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளுக்கு தேசிய விவசாயிகள் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் விவசாயி ஒருவர் முதல்வராக இருந்து அம்மாவின் ஆட்சியை வழிநடத்தி விவசாயிகளின் நலன்களை காத்து வருவது பெருமைக்குரியது. வரும் காலங்களிலும் இது தொடரும். pic.twitter.com/CZEebE551q
— SP Velumani (@SPVelumanicbe) December 23, 2019
இந்நிலையில் ஊரக மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயிகளுக்கு விவசாயிகள் தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் விவசாயி ஒருவர் முதல்வராக இருந்து அம்மாவின் ஆட்சியை வழி நடத்துவது விவசாயிகளின் நலன்களை காத்து வருவது பெருமைக்குரியது எனவும், வரும் காலத்திலும் இது தொடரும்” என குறிப்பிட்டுள்ளார்.