சிவகாசியில் பட்டாசு ஆலைகளை திறக்க வலியுறுத்தி நடைபெற்ற கிடத்தான் ஓட்டப் பந்தயத்தில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை மையமாக கொண்டு இயங்கி வரும் ஆயிரத்து 70 பட்டாசு ஆலைகள் உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பினால் மூடப்பட்டப்பட்டு உள்ளது. இதனால் 8 லட்ச தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆலையை மீண்டும் திறக்க கோரி தொழிலாளர்கள் உற்பத்தியாளர்கள் பட்டாசு பாதுகாப்புக்குழு என அனைவரும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கெதிராக போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கிடத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ மாணவிகளுடன் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.