டெல்லியில் ரவிதாசர் கோவிலை இடித்ததைக் கண்டித்து போராட்டம்

டெல்லியில் ரவிதாசர் கோவிலை இடித்ததைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

டெல்லியில் உள்ள ஆக்கிரமிப்புக் கட்டடங்களை இடித்துத் தள்ள மாநகராட்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்துத் துக்ளக்காபாத்தில் இருந்த ரவிதாசர் கோவிலைக் காவல்துறையினரின் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதைக் கண்டித்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதையடுத்துக் காவல்துறையினர் தடியடி நடத்திக் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி விரட்டியடித்தனர். ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் காவல்துறை வாகனங்களை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியதுடன் காவல்துறையினர் மீது கல்வீசித் தாக்கினர். இதில் காவலர்கள் பலர் காயமடைந்தனர். பத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

Exit mobile version