ரணில் விக்ரமசிங்கவை தரம் தாழ்த்தி விமர்சனம் : ஓரினச் சேர்க்கையாளர்களுடன் ஒப்பிட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இலங்கை அதிபர் சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை ஓரினச் சேர்க்கையாளர்களுடன் ஒப்பிட்டதை கண்டித்து கொழும்புவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய இலங்கை அதிபர் சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஓரினச் சேர்க்கையாளர்களுடன் ஒப்பிட்டு கிண்டலாக கருத்து தெரிவித்திருந்தார்.

சிறிசேனவின் இந்தக் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உட்பட பலர் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் அதிபரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தலைநகர் கொழும்புவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Exit mobile version