குடியுரிமைச் சட்ட மசோதாவைக் கண்டித்து போராட்டம்: அசாமில் விமானங்கள் ரத்து

அசாம் மாநிலத்தில் போராட்டம் நடைபெற்று வருவதால் குவகாத்தி, திப்ரூகர் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் விமானங்களும், அங்குச் செல்ல வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்துள்ள இந்து, சமண, பவுத்த, சீக்கிய, பார்சி, கிறித்துவ மதங்களைச் சேர்ந்தவர்கள் 6 ஆண்டுகள் குடியிருந்தாலே அவர்களுக்குக் குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து அசாம், திரிபுரா, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அசாமின் குவகாத்தி, திப்ரூகர் விமான நிலையங்களுக்குச் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் குவகாத்தி, திப்ரூகர் விமான நிலையங்களில் இருந்து மற்ற நகரங்களுக்குப் புறப்பட வேண்டிய விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version