குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம்: 16 ஆயிரம் வலைத்தள பதிவுகள் நீக்கம்

உத்திரபிரதேசத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை தூண்டும் வகையிலும், கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் டுவிட்டர், பேஸ்புக் என சமூக வலைதளங்களில் 16 ஆயிரத்து 761 பதிவுகள் பதிவிடப்பட்டு இருந்ததை, காவல்துறையினர் கண்டறிந்து, நீக்கி உள்ளனர்.

இதில், அதிகபட்சமாக டுவிட்டரில் 7ஆயிரத்து 513 பதிவுகளும், பேஸ்புக்கில் 976 பதிவுகளும், யூடியூப்பில் 171 பதிவுகளும் பதிவிடப்பட்டு இருந்தன. இத்தகைய பதிவுகளை பதிவிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 110 பேருக்கு இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கு லக்னோவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது வெடித்த கலவரத்தில் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். டெல்லியில் பலர் போலியான பேஸ்புக் கணக்குகள் மூலம் வன்முறையை தூண்டியதும் தெரிய வந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தவறாக பதிவிடப்பட்ட தகவல்களையும் காவல்துறையினர் நீக்கி உள்ளனர். வதந்திகளை பரப்பிய சில பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

Exit mobile version