62 கிராம மக்களுக்கு சொந்தமான 3 ஆலயங்களை கையகப்படுத்த எதிர்ப்பு

மதுரை அருகே, 62 கிராம மக்களுக்கு சொந்தமான 3 ஆலயங்களை, அறநிலையத்துறை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏராளமான பொதுமக்கள் ஒன்றுகூடியதையடுத்து, கையகப்படுத்தும் நடவடிக்கை திரும்ப பெறப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, வெள்ளலூர், உறங்கான்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 62 கிராமங்களை உள்ளடக்கிய பகுதி வெள்ளலூர் நாடு என அழைக்கப்படுகிறது. அங்குள்ள காவல் தெய்வங்களான, ஏழைகாத்த அம்மன், வல்லடிகாரர் திருக்கோவில் உள்ளிட்டவற்றை, இந்துசமய அறநிலையத்துறையினர் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை அறிந்து, ஏராளமான பொதுமக்கள் ஒன்று கூடினர். இதனையடுத்து, இந்துசமய அறநிலையத்துறை மதுரை உதவி ஆணையர், கிராம முக்கியஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியாததால், ஆலயங்களை கையகப்படுத்தும் நடவடிக்கை, தற்காலிகமாக கைவிடப்படுவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Exit mobile version