சபரிமலை சென்ற 2 பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

சபரிமலையில் தரிசனம் செய்த 2 பெண்களுக்கு, போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை கோயிலில், கனகதுர்கா, பிந்து ஆகியோர் கடந்த 2 ஆம் தேதி தரிசனம் செய்தனர். கேரளாவை சேர்ந்த இருவரும், 50 வயதுக்கு குறைவானவர்கள் என்பதால் கடும் கண்டனம் எழுந்தது. கேரளாவில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் வெடித்தன. இந்நிலையில், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி, கனகதுர்கா மற்றும் பிந்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இருவருக்கும் போதிய பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, 51 பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்திருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. அனைவரையும் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்றும், 24 பெண்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

Exit mobile version