2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என மத்திய நிதி நிலை அறிக்கையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார். மக்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து மத்திய நிதி நிலை அறிக்கையில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், 80 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், 2022-ம் ஆண்டுக்குள் மின்சாரம் மற்றும் எரிவாயு அனைத்து வீடுகளுக்கும் தரப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்றும், இதுவரை 35 ஆயிரம் கோடிகள் எல்.இ.டி பல்புகள், உஜ்வாலா திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்பட்டதால், 18 ஆயிரத்து 341 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அதேபோல் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் 9 கோடியே 64 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அத்திட்டத்தை தொடர்வதாகவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.