அரசு முத்திரையுடன் இணையதளத்தில் வில்லங்கச் சான்று பெறும் திட்டம் – விரைவில் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சார் பதிவாளர் கையொப்பம் மற்றும் அரசு முத்திரையுடன் இணையதளத்தில் வில்லங்கச் சான்று பெறும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.

சொத்துக்கள் வாங்கும்போது சம்பந்தப்பட்ட சொத்துக்களில் பிரச்சனை உள்ளதா என்பதைக் கண்டறிய வில்லங்கச் சான்று பார்ப்பது வழக்கமாக உள்ளது. சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வில்லங்கச் சான்று பார்ப்பதற்கு கூடுதல் நேரம் செலவாவதால், இணையதளம் மூலம் வில்லங்கச் சான்று பெறும் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியது.

அதில், சார்பதிவாளர் கையொப்பம் மற்றும் அரசு முத்திரை இல்லாமல் இருந்ததால் வங்கிக் கடன் பெறுவது போன்றவற்றுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால், சார் பதிவாளர் கையொப்பம் மற்றும் அரசு முத்திரையுடன் இணையதளத்தில் வில்லங்கச் சான்று பெறும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.

Exit mobile version