தூத்துக்குடியில் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் குறித்து பொதுமக்களுக்கு பிரசாரம்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாக்காளர்களுக்கு அடுத்த 5 நாட்களில் வாக்களிக்கும் முறை மற்றும் ஒப்புகைச்சீடடு இயந்திரம் குறித்த பயிற்சி அளிக்கப்படும் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைசீட்டு இயந்திரம் குறித்த வாகன விழிப்புணர்வு இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார். இன்று துவங்கி வரும் 13ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு மாவட்டத்தில் இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறவுள்ளது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் நந்தூரி, தூத்துக்குடியில் ஆயிரத்து 593 வாக்குச் வாவடிகள் உள்ள நிலையில், 36 பிரசார வாகனங்கள் மூலம் அடுத்த ஐந்து நாட்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Exit mobile version