இன்னைக்கு மட்டும் 5 படங்களின் Trailer,Single track ரிலீஸ்….

 தினம் தினம், புதுப்படங்கள் குறித்த அப்டேட்கள் வெளிவந்துக்கொண்டிருக்கும் நிலையில், இன்று மட்டுமே 5 படங்களின் ட்ரைலர்,டீசர், சிங்கிள் ட்ராக் ரிலீஸாக உள்ளது.

கோலிவுட் சினிமாவில் ஒரு வாரத்திற்கு இரண்டு படங்கள் ரிலீஸாகி கொண்டிருக்கிறது.அதே போல் தினமும் ஒரு ட்ரைலராவது ரிலீஸாகி வருகிறது.படத்தை பற்றிய பல தகவல்களும் வெளியாகி வரும் நிலையில் இன்று மட்டும் 5 படங்களின் புரோமோஷன்கள் வெளியாக உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துக்கொண்டிருக்கும் ‘எங்க வீட்டு பிள்ளை’படத்திலிருந்து ஏற்கனவே ‘எங்க அண்ணே’ என்ற சிங்கிள் ட்ராக் ரிலீஸ் ஆகியதை அடுத்து, இன்று இரண்டாவது சிங்கிள் ட்ராக்கான ‘மைலாஞ்சி’ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.தனுஷ் நடிக்கும் அசுரன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘கத்திரிப்பூ அழகே’ பாடலும் இன்று மாலை வெளியாக உள்ளது.

மேலும் பா.ரஞ்சித் தயாரிக்கும் ’இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு’திரைப்படத்தின் ட்ரைலரும் இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸாக உள்ளது.அதேபோல் ‘ திட்டம் போட்டு திருடும் கூட்டம்’படத்தின் ட்ரைலரும் 6 மணிக்கு வெளியாக உள்ளது.அடுத்து சிபிராஜ் நடித்து வரும் ‘ரங்கா’ திரைப்படத்தின் டீசரும் இன்று மாலை வெளியாக உள்ளது.படம் ரிலீஸ் தேதிக்காக தான் போட்டிப்போடுவர்கள், ஆனால் இன்று படம் குறித்த அப்டேட்களும் போட்டிப்போட்டு கொண்டே ரிலீஸ் செய்கின்றனர்.

Exit mobile version