உள்ளாட்சித் துறையில் 550 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 112 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய திட்டபணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் 525 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். விழாவில் சிறப்புரையாற்றிய அவர், மாநிலத்தில் உள்ளாட்சி சிறந்து விளங்கினால் தான், வளர்ச்சி பெற முடியும் என்று கூறினார். உள்ளாட்சி பணிகளுக்காக தமிழக அரசு அதிக நிதிகளை ஒதுக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். பெண்களின் வளர்ச்சிக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், பெண்கள் சுயத்தொழிலில் சிறந்து விளங்கும் வகையில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 150 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்.