கல்வித் தொலைக்காட்சி தொடக்க விழா நிகழ்வை அனைத்து பள்ளிகளிலும் நேரலை செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள உத்தரவில், வரும் 26ம் தேதி கல்வித் தொலைக்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறும் இந்நிகழ்வை அனைத்து பள்ளிகளிலும் நேரலை செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிகழ்ச்சிகளை பள்ளிகளில் காண மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும், தலைமை ஆசிரியர்கள் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கேபிள் இணைப்பு உள்ள பள்ளிகள், Projector மூலம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேபிள் இணைப்பு இல்லாத பள்ளிகள், YouTube மூலம் Projector-ஐ Connect செய்து நேரலை செய்ய வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் இந்நிகழ்வை காண்பதை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக பதிவு செய்து கல்வித்துறையின் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.