மக்களவைத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்பு நடத்த தடை: சத்யபிரதா சாஹூ

மக்களவைத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளை வெளியிடுவதற்கான தடை இன்று முதல் அமலுக்கு வருவதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள வரையறைகளின் படி, இன்று முதல் மே – 19 மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்த தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

மேலும் மக்களவை மற்றும் சட்டபேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் நிறுத்தப்பட்டு வாக்குபதிவு முடியும் வரை கருத்துக் கணிப்பு மற்றும் வாக்குப்பதிவு ஆய்வு முடிவுகளை வெளியிடுதல் உட்பட எந்தவொரு தேர்தல் விவகாரங்களையும் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Exit mobile version