சேலத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத இரண்டு தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க மாவட்ட சுகாதாரத்துறை தடைவித்துள்ளது.
சேலம் மாநகரில் குறிஞ்சி மருத்துவமனை மற்றும் மணிபால் மருத்துவமனையில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அரசாங்கத்திடம் தேவைக்கு அதிகமான ஆக்சிஜன் பெற்று, மருத்துவமனை நிர்வாகம் முறைகேடாக அதிக விலைக்கு விற்றது கண்டறியப்பட்டது.
மேலும், அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக செயல்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து புதிய கொரோனா நோயாளிகளை இந்த மருத்துவமனையில் அனுமதிக்க தடை விதித்து மருத்துவமனை வளாகத்தில் அறிவிப்பு ஒட்டப்பட்டது.
தொடர்ந்து அங்கு சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளை பாதுகாப்பான முறையில் வேறு மருத்துவமனைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் உத்தரவிட்டார்