பொள்ளாச்சியில் பேரீச்சை சாகுபடியில் லாபம் காணும் விவசாயிகள்

பொள்ளாச்சியில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு பேரீச்சை விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தென்னை நகரம் என அழைக்கப்படும் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தென்னை சாகுபடிக்கு மாற்றாக மற்ற பயிர்களைப் பயிரிடுவதில்விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அடுத்த ஜக்கார்பாளையத்தைச் சேர்ந்த கல்யாணசாமி என்பவர் தனது விளைநிலத்தில் பேரீச்சை சாகுபடி செய்துள்ளார். கிலோவிற்கு 250ரூபாய் முதல் 300ரூபாய் வரை வியபாரிகள் விலை கொடுப்பதால் பேரீச்சை விளைச்சல் நல்ல லாபம் கொடுப்பதாக கல்யாணசாமி கூறுகிறார். குறைந்த தண்ணீரில் லாபம் கொடுக்கும் பேரீச்சை விவசாயத்தை, விவசாயிகளுக்கு பயிற்றுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version