பேராசிரியர்கள் மாணவ, மாணவிகளை தங்களது வீடுகளுக்கு அழைக்கக்கூடாது என சென்னை பல்கலைக் கழகம் அறிவுறுத்தி உள்ளது.
மாணவ, மாணவியரை பேராசியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் தங்களது வீடுகளுக்கு அழைக்கக்கூடாது என்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் அழைத்தால் மாணவர்கள் செல்லக்கூடாது எனவும் சென்னை பல்கலைகழகம் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
தவிர்க்க முடியாத காரணம் கருதி பேராசியர் வீடுகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டால் துறை ரீதியான அனுமதி பெற வேண்டும் என்றும், பாலியல் தொந்தரவு இருந்தால் பேராசியர் ரீட்டா ஜான் தலைமையிலான குழுவிடம் எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரேனும் தவறு இழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.