"பேராசிரியர்களை கல்லூரிக்கு வர நிர்பந்திக்க கூடாது" – கல்லூரி கல்வி இயக்குநரகம்

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பேராசிரியர்களை கல்லூரிக்கு வர நிர்பந்திக்க கூடாது என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி இருக்கிறது.

இது குறித்து கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பாடம் எடுக்கவும், கல்லூரி சார்ந்த பணிகள் மேற்கொள்ளவும் பேராசிரியர்களை கல்லுரிக்கு வர கட்டாயப்படுத்துவது விதிமீறல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை சேர்ந்த பேராசிரியர்கள், கல்லூரி பாடங்களை இணைய வழியாக வீட்டில் இருந்தவாறு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கல்வி பயிற்சி நிறுவனங்கள், பயிற்சி மையங்களிலும் இணைய வழியாக பாடங்கள் நடத்த வேண்டும், தேர்வுகளும் இணைய வாயிலாக நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version