கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக, தமிழகத்தில் ஒரு நாளைக்கு 150 டன் என்ற அளவில் கபசுர பொடி தயாரிக்கப்படுகிறது..
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள, தமிழக அரசு கபசுர குடிநீரை விநியோகித்து வருகிறது.. நோய் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கும், கபசுரம் கொடுக்கப்படுகிறது.
திருப்போரூர் அடுத்த ஆலத்தூரில் உள்ள தமிழ்நாடு அரசு டாப்ம்கால் நிறுவனத்தில் கபசுரம் தயார் செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வருகின்றது. கொரோனாவில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு செல்பவர்களுக்காகவும் மூலிகை மருந்துகள் அடங்கிய ஒரு சிறப்பு பெட்டகம் இங்கே தயார் செய்யப்படுகிறது.. கடந்த 3 மாதங்களாக ஒரு நாளைக்கு 150 டன் என்ற அளவில், இங்கே கபசுரம் உற்பத்தி செய்யப்படுகிறது… ஒரு நாளைக்கு 3000 முதல் 4000 கிலோ வரைக்கும் தங்களால் சப்ளை செய்ய முடியும் என அந்நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
சுக்கு,திப்பிலி,இலவங்கம்,சிறுகாஞ்சொரி வேர்,அக்ரகாரம் உள்ளிட்ட 15 மூலிகை பொருட்களை சேர்த்து கபசுர பொடி தயார் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.