வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது

வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல்மின் நிலையத்தில், இரு நிலைகளில் உள்ள ஐந்து அலகுகளில், ஆயிரத்து 830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில், 20ஆம் தேதி இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக, 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இதேபோல் முதல் நிலையில் உள்ள இரண்டாவது அலகில், ஆண்டு பராமரிப்பு பணி காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. வடசென்னை அனல்மின் நிலையத்தின் மொத்த உற்பத்தித் திறனில் தற்போது ஆயிரத்து 620 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

Exit mobile version