அரக்கோணம் நகராட்சியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி

அரக்கோணம் நகராட்சியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி துவக்கி வைத்தார்.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்ட பாதாள சாக்கடை பணிகளால் அனைத்து சாலைகளும் சேதமடைந்தன. இந்த நிலையில் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதற்காக தமிழக அரசு முதல் கட்டமாக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கின. அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் ரவி, சாலை அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார். அரக்கோணம் நகராட்சியில் 36 சிமெண்ட் சாலைகளும், 8 தார்சாலைகளையும் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Exit mobile version