கோதண்டராமர் சிலைக்கு தொடரும் சிக்கல்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி பகுதியில் இரண்டாவது நாளாக கோதண்டராமர் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கொரக்கோட்டை பகுதி மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட 350 டன் எடை கொண்ட கோதண்டராமர் சிலை, கர்நாடக மாநிலம் ஈஜிபுராவில் நிறுவப்பட உள்ளது. பிரம்மாண்ட கார்கோ லாரியில், கோதண்டராமர் சிலை ஏற்றப்பட்டு, கிருஷ்ணகிரி வழியாக கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பல்வேறு தடைகளைத் தாண்டி, கொண்டு வரப்பட்ட கோதண்டராமர் சிலை, தென்பெண்ணை ஆற்றைக் கடப்பதில் சிக்கல் எழுந்தது. இதற்காக ஆற்றின் குறுக்கே தற்காலிக மண்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும், கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், ஓசூர் பகுதியில் மழை பெய்ததால் தற்காலிக மண்சாலை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டது. மண் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்ததும், கோதண்டராமர் சிலை, தமிழக எல்லையைக் கடந்து, கர்நாடகாவுக்குள் செல்லும்.

Exit mobile version