சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி நடந்து வருகின்றது. இதில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதிப்போட்டியில் சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் அணியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி, மாறி புள்ளிகள் பெற்றதால் ஆட்டம் பரபரப்பாக நகர்ந்தது. கைப்பந்து ரசிகர்களுக்கு கண்கவர் விருந்து படைத்த இந்த ஆட்டத்தில் சென்னை அணி 16-14, 9-15, 10-15, 15-8, 15-13 என்ற செட் கணக்கில் கொச்சி அணியை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்தது.அந்த வெற்றி மூலம் இறுதிபோட்டிக்கும் முன்னேறியது. லீக் ஆட்டத்தில் கொச்சி அணியிடம் சென்னை அணி அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணியில் ருஸ்லான்ஸ் 17 புள்ளிகளும், நவீன்ராஜா ஜேக்கப் 13 புள்ளிகளும், ருடிவெரேப் 11 புள்ளிகளும் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் கோழிக்கோடு ஹீரோஸ்-சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.