புரோ கபடி லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி

புரோ கபடி லீக் தொடரின் லீக் ஆட்டத்தில், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியுடன் மோதிய தமிழ் தலைவாஸ் அணி போராடி தோற்றது.

7-வது புரோ கபடி லீக் தொடரின் 52வது லீக் ஆட்டம் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ் தலைவாஸ் அணியும், பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும் மோதின. முதலில் வெற்றிகரமான துவக்கத்தை கொடுத்த தமிழ் தலைவாஸ் அணி, ஒரு கட்டத்தில் 6 க்கு 6 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் நின்றது. பின்னர் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி ஆட்டத்தை கைப்பற்றி, புள்ளிகளை அள்ளியது. இறுதி வரை போராடிய தமிழ் தலைவாஸ் அணி, 28 க்கு 26 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது. முன்னதாக நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில், புனேரி பால்டன் 31 க்கு 23 என்ற புள்ளி கணக்கில், நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்சை தோற்கடித்தது. இந்நிலையில், இன்று இதே மைதானத்தில் நடைபெற்றவுள்ள 53வது லீக் ஆட்டத்தில், பாட்னா பைரட்ஸ் அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதவுள்ளன.

Exit mobile version