பிரியங்கா காந்தி அழகாக இருப்பது, காங்கிரஸிற்கு வாக்குகளை சேர்க்காது: பீகார் பாஜக அமைச்சர் சர்ச்சை கருத்து

பிரியங்கா காந்தி மிகவும் அழகாக இருப்பது, காங்கிரஸிற்கு வாக்குகளை சேர்க்காது என, பீகார் மாநில அமைச்சர் வினோத் நாராயண் ஜா, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.முன்னதாக இதுகுறித்து பேசிய பீகார் மாநில பாஜக அமைச்சர் வினோத் நாராயண் ஜா, பிரியங்கா காந்தி மிகவும் அழகானவர் என்றும், ஆனால் அவரால் அரசியலில் சாதிக்கமுடியாது என்றும் சாடினார். பிரியங்கா காந்தியின் அழகான முகத்திற்காக இங்கு யாரும் காங்கிரஸிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அதேபோல், நில ஊழல் மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள ராபர்ட் வத்ராவின் மனைவி என்பதுவே பிரியங்கா காந்தியின் மற்றொரு தகுதி என்றும் விமர்சித்துள்ளார்.

Exit mobile version