பிரதமர் மோடிக்கு எதிராக பள்ளி சிறுவர்கள் கோஷம் எழுப்பியது தொடர்பாக பிரியங்கா காந்திக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அங்கிருந்த பள்ளி குழந்தைகள் பிரதமர் மோடி குறித்து அவதூறாக கோஷம் எழுப்பினர். பிரியங்கா காந்தி முன்னிலையில் குழந்தைகள் கோஷம் போடுவது தொடர்பான வீடியோ, வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், இது தொடர்பாக, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம், பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரியங்கா காந்தியுடன் குழந்தைகள் முழக்கமிட்டு சென்றது குறித்தும், குழந்தைகளின் பெயர், எத்தனை குழந்தைகள் அழைத்து வரப்பட்டனர் போன்ற விவரங்கள் 3 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.