நடிகை ப்ரியா பவானி சங்கர் தமிழில் ஒரு சில படங்கள் நடித்தாலும் ஏராளமான ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.தமிழ் சினிமாவில் மேயாத மான் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்பு தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் , மான்ஸ்டர் ஆகிய படத்தில் நடித்தார்.தற்போது எஸ்.ஜே .சூர்யாவுடன் ‘ பொம்மை படத்தில் நடித்துள்ளார்.விரைவில் அந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனது காதலனின் பிறந்தநாளை முன்னிட்டு ப்ரியா பவானி சங்கர் தனது மனதில் தோன்றியவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் ‘நீ, நான் கேட்க மறந்த இசை. காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவையில்லை, சூழ்நிலைக்கு மாறாத அன்பு போதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தா அவள் வாழ்க்கைல உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்டுக்கறேன்’.மேலும் ப்ரியாவும் , ராஜ்வேலும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ..