டிவிட்டர் பதிவால் கடுப்பான பிரியா பவானி சங்கர்

 சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர்களில் குறுகிய காலத்திலேயே அதிக ரசிகர்களை தனக்கென கொண்டவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

மேயாத மான் படத்தில் அறிமுகமான அவர் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்தார். மேலும் கடந்த வாரம் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்த “மான்ஸ்டர்” வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் என்ற பெயரில் ட்விட்டர் பதிவு ஒன்று வெளியானது. அதில், “மான்ஸ்டர் படம் அனைவருக்கும் பிடித்துள்ளது என்று நம்புகிறேன். உங்களது பாராட்டுகளுக்கு நன்றி” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை மேற்கோள்காட்டி பிரியா பவானி சங்கர் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “அன்புள்ள போலியான மக்களே! உங்களுக்குள் இருக்கும் ஆர்வத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் என்னை கஷ்டப்படுத்தாதீர்கள்” என பதிலிட்டுள்ளார். ஏற்கனவே அவர் பெயரில் போலியாக பல டிவிட்டர் கணக்குகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version